193
குளோபல் தமிழ் செய்தியாளர்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்படும் எம்.ஜி. இராமச்சந்திரனின் வாழ்க்கையை வரலாற்று படமாக எடுக்கும்பொருட்டு, படப்பிடிப்பு இன்று இன்றைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாடகக் கலைஞரான பயணத்தை தொடங்கி, திரைப்பட நடிகராக பயணத்தை தொடர்ந்து தமிழக மக்களிடம் பெரும் இரசிக செல்வாக்கைப் பெற்ற எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதலமைச்சராகவும் அரசியல் பயணத்தில் ஈடுபட்டார். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த அவரது வாழ்வை சினிமாவாக்கும் முயற்சியில் இயக்குனர் அ.பாலகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரிக்கும் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் காமராஜ் ‘தி கிங்மேக்கர்’, ‘முதல்வர் மகாத்மா’ ஆகிய திரைப்படங்களை ரமணா முதலிய திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், அறிஞர் அண்ணாவாக இயக்குனர் எஸ். எஸ். ஸ்டான்லி ஆகியோர் நடிக்கின்றனர். அத்துடன் முன்னாள் முதல்வர்கள் வி.என். ஜானகி, ஜெ. ஜெயலலிதா ஆகிய கதாபாத்திரங்களுக்கு, உருவ ஒற்றுமையுள்ள நடிகைகளின் தேர்வு நடந்து பெறுகின்றது,
இதேவேளை சிங்கம் புலி, பிளாக் பாண்டி, ஏ.ஆர்.தீனதயாளன், முத்துராமன் மற்றும் பலர் இத் திரைப்படத்தில் நடிக்கின்றனர். இதேவேளை காமராஜ்’ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதுகிறார். படத் தொகுப்பு எஸ்.பி.அகமது, ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கின்றார்.
இன்று நடைபெற்ற படப்பிடிப்பு ஆரம்ப நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அ.தி.முக. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக சட்டசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
எம். ஜி.ஆரின் படத்தின் முன்னோட்டம் அவரது பிறந்த நாளான வரும் ஜனவரி 17ஆம் திகதி வெளியிடப்பட உள்ளதாகவும் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Spread the love