226
இந்தியாவின் மராட்டியத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்குட்படுத்தி கொலை செய்த மூன்று பேரை சாகும்வரை தூக்கிலிட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவரை 3 பேர் சேர்ந்து பாலியல் வன்முறைக்குட்படுத்தி கொலை செய்தமை தொடர்பிலேயே நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். குறித்த 3 பேரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது அகமதுநகர் செசன்ஸ் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவந்த விசாரணை நிறைவு பெற்றதையடுத்து நேற்றையதினம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love