உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. 2043ஃ57 என்ற வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் சம்பந்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதி ஒன்றை தீர்மானிப்பதற்கு குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது அத்தியாவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது:-
170
Spread the love