கிளிநொச்சி மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களைச் சேர்ந்த 500 மாணவா்களுக்கு கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வழக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தினால் ஆயிரத்து ஜநூறு ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, தொடர்ச்சியாக மாதாந்தம் 500 ரூபா வீதம் மாணவா்களின் கல்விச் செலவுக்கு பணமும் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டு வருகிறது.
இதேவேளை வவுனியா வடக்கு நெடுங்கேணி மகா வித்தியாலயத்திலும் மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்களோடு, 21பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குயின்ரன்ஸ் மற்றும் கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தை சேர்ந்தவா்களும் என பலா் கலந்துகொண்டனர்.