166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியை இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடும் முயற்சியில் சுதந்திரக் கட்சி ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி ஆர்வம் காட்டி வருகின்றது.
கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு இடைக்கிடையே தகவல்கள் அனுப்பி வைக்கப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டாக இணைந்து போட்டியிட வேண்டுமாயின் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளை கூட்டு எதிர்க்கட்சி கோரி நிற்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love