191
தமிழகத்தின் மதுரை மாவட்டம் மேலூர் என்ற கிராமத்தில் இறந்த ஜல்லிக்கட்டு காளையின் நினைவாக கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.மேலூர் மில்கேட்டில் பிரசித்தி பெற்ற சிங்கம்மாள் கோவிலிலேயே இவ் வழிபாடு நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் வளர்க்கப்பட்டு வந்த காளை அலங்காநல்லூர், பாலமேடு முதலிய பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்று அப்பகுதிக்கு பெருமை சேர்த்துள்ளது.
கடந்தாண்டு சுகவீனம் காரணமாக காளை உயிரிழந்ததை அடுத்து கிராம மக்கள் மாலை மரியாதையுடன் அடக்கம் செய்தனர். முதலாவது ஆண்டு நினைவை முன்னிட்டு சிங்கம்மாள் கோவிலில் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
Spread the love