குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்வித டீலும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி அல்லது அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் எவ்வித தொடர்பும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இரவு விழுந்த குழியில் பகலிலும் விழத் தயாரில்லை என குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு நல்லதொரு பாடத்தை கற்பிக்கும் பொறுப்பு மக்களைச் சாரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டை பிளவடையச் செய்யும் வகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.