குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஆறு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளனர்.
மேல், சபரகமுவ, வடமேல், கிழக்கு ஆகிய மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதி அமைச்சர்களும் அமைச்சர்களும் இவ்வாறு இணைந்து கொள்ள உள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகிய தரப்புக்களுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.