141
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட யோசனை நடைமுறைச் சாத்தியமற்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 2018ம் ஆண்டுக்காக நிதி அசைம்சர் மங்கள சமரவீர வரவு செலவுத் திட்ட யோசனையை பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். இதில் தனிநபர் தேசிய வருமானத்தை 5000 டொலர்களாக உயர்த்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதற்கு, மொத்த தேசிய உற்பத்தி 25 வீதத்தினால் உயர்த்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார வளர்ச்சி வீதம் வெறும் 4.5 வீதமே எனவும் ஓராண்டில் 25 வீதத்தினால் உயர்த்தப்படக்கூடிய சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love