கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட மீது தமிழக கடலோர காவல்படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இந்தி அல்லது ஆங்கிலம் பேசவில்லை எனக் கூறி இந்திய கடற்படையின் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்’டு சம்பவத்தில் படுகாயமடைந்த 2 மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட மீனவர் பிச்சை அளித்த புகாரின் பேரில் இந்திய கடலோர காவல்படையினர் மீது தமிழக கடலோர காவல்படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் :
Nov 13, 2017 @ 13:04
இந்தியாவின் கடலோரக் காவல்படையினர் தமது மாநிலங்களில் ஒன்றான தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் 4 தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணி அபாக்கா என்ற இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான டோரா கடலோரக் காவலர்கள் 3 படகில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவரான பிச்சை என்பவர் படுகாயமடைந்துள்ளார். இலங்கை மீனவர்கள் தான் எல்லைகடந்து மீன் பிடியில் ஈடுபடுவதாக நினைத்தே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இந்திய கடலோர காவல் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் தமிழகர்கள் இந்திய எல்லையை கடந்து வரும்போது அவர்களை இந்திய காவல்படையினர் கைது செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளதாகவும் தமிழக ஊடங்கள் கூறுகின்றன.