174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமையே அண்மையில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் கண்டறிவதற்காக மூவர் அடங்கிய அமைச்சரவை துணைக்குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருந்தார்.
உரிய அளவில் களஞ்சியப்படுத்தாமை மற்றும் அவசர நிலைமைகளில் விநியோகம் செய்ய ஓர் பொறிமுறைமை உருவாக்காமை ஆகியனவே தட்டுப்பாடு ஏற்படக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கப்பல்கள் கால தாமதமடைவதற்கான காரணத்தை கண்டறிவதற்கு போதியளவு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் இந்தக் குழு தெரிவித்துள்ளது.
Spread the love