அயோத்தி விவகாரத்தில் அரசின் தலையீடு ஏதும் இல்லை எனவும் பேச்சு வார்த்தையில் அரசின் பங்களிப்பும் கிடையாது எனவும் இந்திய மத்திய அமைச்சர் நக்வி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய வழக்கை விசாரிதத அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தீர்ப்பு அளித்திருந்தது.
அதை எதிர்த்து உச்சநீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து நீதிமன்றுக்கு வெளியே தீர்வு காணப்பட வேண்டுமென வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் முன் வந்துள்ள நிலையில் நாளை வியாழக்கிழமை அவர் அயோத்தி சென்று, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் சந்திக்க உள்ளார்.
இந்தநிலையில் குறித்த சமரச பேச்சுவாத்தையில் மத்திய அரசின் தலையீடு உள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளநிலையிலேயே இந்திய மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் பிரச்சினைக்கு சம்மந்தப்பட்டவர்களிடையே சமரச தீர்வு காணப்பட்டால் அது வரவேற்கத்தக்கது எனவும்அவர் தெரிவித்துள்ளார்.