கிழக்கு ரஸ்யாவில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெல்கன் என்ற கிராமத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளதாகவும் காபரோவ்ஸ்க் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 19 பேர் பயணிக்கக் கூடிய சிறிய ரக விமானமே இன்றையதினம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து விட்ட குறித்த விமானம் கீழே விழுந்து நொருங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், விமானத்தின் கறுப்புப்பெட்டி மீட்கப்பட்டு ஆய்வு செய்ததன் பின்னர் விபத்துக்கான காரணம் தெரியவரும் எனவும் ரஸ்ய விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.