214
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லெபனானின் பிரதமர் சாட் ஹரீரியை, சவூதி அரேபியா தடுத்து வைத்துள்ளதாக லெபானனிய ஜனாதிபதி மைக்கேல் அவுன் ( Michel Aoun ) தெரிவித்துள்ளார். லெபனான் பிரதமர் ஹரீரி, கடந்த 4ம் திகதி சவூதி அரேபியாவின் ரியாத்தில் வைத்து தமது பதவிவிலகல் பற்றி அறிவித்திருந்தார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியை விலகுவதாக அவர் செய்வதாகத் தெரிவித்திருந்தார்.
எனினும், சவூதி அரேபியா, பிரதமர் ஹரீரியை தடுத்து வைத்துள்ளதாகவும் அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லெபனானுக்கு எதிரான ஓர் செயற்பாடாகவே இதனை நோக்க வேண்டுமென ஜனாதிபதி மைக்கேல் அவுன் தெரிவித்துள்ளார்.
Spread the love