கேரளாவில் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மண்ணாசேரி முக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் பல மாணவிகள் தங்கி படித்து வருகிவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் திருச்சூர் இடதுறுத்தி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய உஸ்மல் உல்லாஸ் என்ற மாணவியும் மருத்துவப் பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை மாணவி உஸ்மல் உல்லாஸ் திடீரென்று கல்லூரியின் 4-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதிக்க முயற்சி செய்துள்ளார். அவரது சக மாணவிகள் உஸ்மலின் நடவடிக்கையில் தெரிந்த அவரை பின் தொடர்ந்து சென்று தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் உஸ்மல் உல்லாஸ் கீழே குதித்து தற்கொலை செய்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
கிழே குதித்த மாணவியை உடனடியாக அதே கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற போதும் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றிய தகவல் முக்கம் காவற்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
காவற்துறையின் வாசாரணையின் போது, நேற்று மாலை உஸ்மல் உல்லாசுக்கு கையடக்கத் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அலைபேசியில் அவர், கோபமாகவும் கண்ணீருடனும் பேசியதாகவும் அதன் பின்பே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் கைப்பேசிக்கு பேசியது யார்? என்பதை கண்டுபிடிக்க காவற்துறை விசாரணையை ஆரம்பித்து உள்ளதாக கல்லுரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.