202
தமிழ் திரையுலகில் இயக்குனர் பாலாவின் திரைப்படங்கள் பலவும் தனித்துவமாக அமைவதும் கவனத்தை ஈர்ப்பதுமாக உள்ளன. சேது, பிதாமகன், பரதேசி, நான் கடவுள் முதலிய தமிழ் திரைப்படங்களைக் குறிப்பிட இயலும். இந்த நிலையில் பாலா அண்மையில் இயக்கியுள்ள திரைப்பட ரீசர் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் ரீசர் அண்மையில் வெளியானது. இதில் பெண்களை கொச்சைப்படுத்தும் வார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இயக்குனர் பாலா விளம்பர நோக்கம் கருதியே இந்த வார்த்தையை ரீசரில் சேர்த்துள்ளதாக பெண்ணியவாதிகள் கூறுகின்றனர்.
இதேவேளை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினருமான உ.வாசுகி, ஆணின் கட்டற்ற பாலியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு குலம். அந்த வழக்கம் மண்மூடி போவதற்கு பல போராட்டங்கள் நடந்துள்ளன. எனவே யதார்த்தம் என்கிற பேரில் இதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
குறைந்தபட்சம் முழு படத்தை பார்க்கும் போதாவது எந்தப் பின்புலத்தில் காட்சி அமைகிறது என்று புரிந்து கொள்ள முடியும். டீஸரில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பிய அவர், ஜோதிகாவை சொல்ல வைத்து ஷாக் ஏற்படுத்தி விளம்பரம் தேடும் ஏற்பாடு தவிர வேறென்ன? யதார்த்தத்தை காட்டுவது மட்டுமல்ல, மாற்றுவதும் சினிமாவின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிகா, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் நாச்சியார் திரைப்படத்திற்கு இளைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
Spread the love