குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிம்பாப்பேயின் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே பதவி விலக வேண்டுமென யுத்த வீரர்கள் அமைப்பின் தலைவர் கிறிஸ் முட்வங்வா (Chris Mutsvangwa) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாரியளவில் வீதிப் போராட்டமொன்றை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் ஆரம்பித்து வைத்ததனை தம்மால் முடித்து வைக்க முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் கட்டாயமாக முகாபே தனது பதவி விலக வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
முகாபே நேற்றையதினம் சிம்பாப்பேயின் தலைநகர் ஹராரேயில் இந்த நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்தார். கடந்த புதன்கிழமை இராணுவத்தினர், ஆட்சியை கைப்பற்றியதனைத் தொடர்ந்து முதல் தடவையாக முகாபே பொது நிகழ்ச்சி ஒன்றில் பஙகேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொபேர்ட் முகாபே முதன்முறையாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு
Nov 17, 2017 @ 11:31
ஜிம்பாப்வேயின் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றிய பின்னர் முதன்முறையாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று ரொபேர்ட் முகாபே பங்கேற்றுள்ளார். ஜிம்பாப்வேயில் திடீரென நேற்றுமுன்தினம் ராணுவபுரட்சி ஏற்பட்டதன் காரணமாக 37 ஆண்டுகளாக ஜனாதிபதியாக செய்யப்பட்டு வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் முகாபேவுக்கும் ராணுவத்துக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தையில் கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் மற்றும் தென்னாப்பிரிக்காவின் தூதர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முகாபே விரைவில் நாடு கடத்தப்படுவார் எனவும் அவரது மனைவி மற்றும் ஊழல் செய்த முக்கிய அமைச்சர்கள்;, உயரதிகாரிகள் கைதாவார்கள் என தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு பின்னர் முதன்முறையாக பொது நிகழ்ச்சியில் இன்று முகாபே பங்கேற்றுள்ளார்.
ஹராரே நகரின் புறநகர் பகுதியில் இன்று நடைபெற்ற ஜிம்பாப்வே திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டமளிப்பு விழாவுக்கான சீருடையுடன் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.