குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவோருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் கடும்போக்குவாத கட்சிகளில் ஒன்றான தெஹ்ரீக்-இ- லாபியக் (Tehreek-e-Labaik ) கட்சியே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. தலைநகர் இஸ்லாமாபாத்திற்கான பிரதான பாதை ஒன்றை மறித்து கடந்த பத்து நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
பாகிஸ்தானின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் பணி நீக்கப்பட வேண்டுமெனக் கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. போராட்டத்தை கைவிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் போராட்டக்காரர்கள் உத்தரவிற்கு செவிசாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தை இலகுவில் கைவிடப் போவதில்லை என அவர்கள் சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளனர்.