குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் மகளான இவன்கா ட்ராம்பின் கணவரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான ஜாரெட் குஷ்னெர் (Jared Kushner ) விசாரணைகளுக்கு போதியளவு ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் மற்றும் ரஸ்யாவின் மறைமுக நடவடிக்கை குறித்த விபரங்களை ஜாரெட் வெளியிடவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு செனட்டர்களினால் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தேர்தலில் ரஸ்யாவின் தலையீடு குறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ரஸ்யாவுடன் ஜாரெட் தொடர்பு பேணியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ட்ராம்பின் மருமகன் விசாரணைகள் தொடர்பிலான மின்னஞ்சல் தகவல்களை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தேவை ஏற்பட்டால் மேலும் உதவிகளை வழங்கத் தயார் எனவும் சட்டத்தரணி ஊடாக ஜாரெட் தெரிவித்துள்ளார்.