குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலியில் இடம்பெற்ற பிரச்சினையை இனவாத பிரச்சினையாக உருவாக்க வேண்டாம் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க கோரியுள்ளார். காலி ஜின்தொட்டவில் இடம்பெற்ற பிரச்சினை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இதனை இனவாத பிரச்சினையாக உருவாக்கிக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனவாதத்தை தூண்டும் தரப்பினர் தற்போது முகநூல் ஊடாக போலியான வீடியோக்களை பதிவேற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட உடனேயே காவல்துறை மா அதிபருடன் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.