Home இலங்கை “பிள்ளையார்களும் காணாமல் ஆக்கப்படுகின்றனர்”…

“பிள்ளையார்களும் காணாமல் ஆக்கப்படுகின்றனர்”…

by editortamil

மன்னாரில் பல்வேறு இடங்களில உள்ள பல பிள்ளையார் சிலைகள் திருடப்பட்டுள்ளதுடன் இன்று அதிகாலை பிள்ளையார் சிலைகள் மற்றும் தேவாலயத்தின் உண்டியல் என்பன உடைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி0ன்றது.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, நான்காவது தடவையாக இன்று இனந்தெரியாதோரால் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் உடைக்கப்பட்ட இந்த சிலை மீளவும் திருத்தியமைப்பப்பட்டு குறித்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் மன்னார்-யாழ் பிரதான வீதி, நாயாற்று வழி சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையும் மூன்றாவது தடவையாக உடைக்கப்பட்டுள்ளதாகவும் உயிலங்குளம்-பள்ளமடு பிரதான வீதியில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, ஆண்டாங்குளம் சந்தியில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்திற்கு அருகாமையில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மாந்தை தேவாலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More