160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னய்யாவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமை வருத்தமளிப்பதாக ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழரான சின்னய்யாவிற்கு கடற்படைத் தளபதி பதவி வழங்கப்பட்டமை நல்லிணக்கத்திற்கு ஓர் உந்து சக்தியாக அமைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறுகிய காலத்திற்குள் அவர் பதவியிலிருந்து ஓய்வுறுத்தப்பட்டமை வருத்தமளிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love