164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெயன்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். வெயன்கொட ஹின்தெனிய பட்டியகொட புகையிரத கடவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கொழும்பு நோக்கிப் பயணித்த சரக்கு புகையிரதம் ஒன்றுடன் மோட்டார் வாகனமொன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த நபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த புகையிரத கடவை பாதுகாப்பற்ற புகையிரத கடவை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love