குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட இரணைமடுகுளத்திலிருந்து இன்று(20) விவசாய நடவடிக்கைக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வழமையாக பெரும் போக நெற்செய்கைக்கு நீர் தேவைப்படும் போது இரணைமடுகுளத்திலிருந்து நீர் திறந்து விடப்படுவது வழமையாகும். ஆனால் இவ்வருடம் புனரமைப்புச் செய்யப்பட்ட காரணத்தினால் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு நீர் விநியோகத்தை ஆரம்பித்து வைத்துள்ளனா்.
இரணைமடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 22000 ஏக்கர் செய்கைகளிற்கும் நீர் வழங்குவதற்காக குறித்த குளம் இன்று திறந்து விடப்பட்டது. இவ்வருட 22000 ஏக்கரில் காலபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மழை .இன்மைமையால் வயல் நிலங்களிற்கு நீர் தேவைப்பட்ட நிலையில் இன்று திறந்து விடப்பட்டது.
கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்று குளத்து நீரை திறந்து விடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினா் ஜங்கரநேசன் பசுபதிபிள்ளை குருகுலராஜா, பொறியலாளர்கள், இரணைமடு விவசாய சம்மேளனத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.