புதிய அரசமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் எதிர்வரும் 24ஆம் திகதியும் கல்முனை மற்றும் மட்டக்களப்பில் 25ஆம் திகதியும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, இடைக்கால அறிக்கை பற்றிய தெளிவூட்டல்களை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அரசமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.