தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாகுவதனை விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வன்முறைகளை விரும்பவில்லை எனவும், அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமே அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டம் எட்டப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார். அரசில் கைதிகள் குறித்த பிரச்சினைக்கு விரைவில் காத்திரமான தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் மீள உருவாகுதவனை விரும்பவில்லை – சம்பந்தன்:-
166
Spread the love
previous post