இந்தியாவின் புனே அருகே நதிகள் இணைப்பு திட்ட பணியின் போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் கிரேன் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில் உள்ள பீமா மற்றும் நிரா நதிகளை இணைக்கும் திட்டம் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் வெளியே வந்து கொண்டிருந்த போது கட்டுமான பணிக்காக தளவாட பொருட்களை தூக்கிக்கொண்டு வரும் கிரேனை தாங்கி பிடித்து இருக்கும் இரும்பு கம்பி அறுந்ததன் காரணமாக விழுந்த 250 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து கிரேன் அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளது. இந்தவிபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்ததாகவும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது