இன்று பெற்றோல் மாபியா உள்ளது. இந்த எண்ணை வியாபாரத்தில் ஓரு குறிப்பிட்ட குழுவொன்று லாபமீட்டி வருகின்றது. இதை நான் மாற்றி அமைப்பேன் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற 2018ஆம் ஆண்டுக்கான கூட்டுஓப்பந்த கைச்சாத்திடல் நிகழ்விலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
நான் இந்த நாட்காழியில் இருக்கும் வரை மக்களின் பணத்தை களவாட விடமாட்டேன் எனவும் இதை நான் செய்வது இந்த நிறுவனத்தின் நன்மை கருதியே எனவும் தெரிவித்த அவர் நிறுவனத்துக்கு தீமையேற்படும் விடயத்தை நான் ஒருபோதும் செய்யவிடமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நான் அமைச்சராக இருக்கும் வரை இந்நிறுவனத்தை விற்க ஒப்புக்கொள்ளமாட்டேன் எனவும் எனது கொள்கை அரச சொத்துக்களை பாதுகாப்பதே எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டுஒப்பந்தம் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க முன்னிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நிறுவனத்தின் ஊழியர் சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பதவி உயர்விற்கேற்ப சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க இவ்வொப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.