குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூடைப்பந்தாட்ட வீரர் ஒருவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். டுவிட்டர் ஊடாக இட்டுள்ள ஓர் பதிவின் மூலமாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல கூடைபந்தாட்ட வீரரான லியஞ்செலோ பால் ( LiAngelo Ball ) மீது இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
சீனாவில் கூடைப்பந்தாட்டப் போட்டியொன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த லியஞ்செலோ பாலின் இன் மகன் உள்ளிட்ட நான்கு பேரை தாமே விடுதலை செய்ததாகத் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையோ, வீரர்களின் பெற்றோரோ அல்லது வேறும் தரப்பினரோ சீனாவில் சிறைப்பிடிக்கப்பட்ட வீரர்களை விடுதலை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
சீனாவில் கடைகளில் களவாடுவது பாரிய தண்டனைகளை அனுபவிக்கப்படக்கூடிய குற்றச் செயல் என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தாமே பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.