குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் நடத்தாமைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் போன்றதொரு சிறிய தேர்தலைக் கூட நடத்த முடியாமைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் எனவும், இதனை மேலும் காலம் தாழ்த்துவது முறையற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதனை எதிர்க்கின்றோம், துரித கதியில் தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்