254
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனியின் அதிபர் அன்ஜலா மோர்கல் கூட்டணி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முனைப்புக்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், புதிதாக கூட்டணி அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அன்ஜலா மோர்கலின் கன்சர்வேட்டிவ் கட்சியும் சமூக ஜனநாயகக் கட்சியும் இணைந்து கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தால் புதிதாக தேர்தல் நடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love