183
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோப்பாய் ஆசிரியர் கலாசாலை வளாகத்தக்கு முன்பாக இன்று காலை இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அடிப்படைச் சம்பளத்தில் 10 ஆயிரம் ரூபா அதிகரிப்பு, ஆசிரிய உதவியாளர்களை தரம் 3-2இற்குள் உள்ளீர்க்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
Spread the love