மறைந்த தமிழக முன்னாள முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையகத்தில் அரச மருத்துவர்கள் இரண்டு பேர் இன்று முன்னிலையாகி விளக்கமளித்துள்ளனர்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி நேற்று தனது நேரடி விசாரணையை ஆரம்பித்திருந்தார்.
இந்தநிலையில் முதன்முதலாக பிரமாண பத்திரம் அளித்த மருத்துவர் சரவணன் நேற்று ஆணையகத்தில் முன்னிலையாகி விளக்கம் அளித்தார். அதேவேளை ஜெ.தீபா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, டிராபிக் ராமசாமி ஆகியோரும் ஆணையகத்தில் மனுக்களை அளித்தனர்.
இந்தநிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பீடாதிபதி நாராயணபாபு மற்றும் மருத்துவர் மயில்வாகனன் ஆகியோர் இன்று விசாரணை ஆணையகத்தில் முன்னிலையாகி நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.