பாராளுமன்றம் மீது குண்டு வீசுவதாக விடுத்த எச்சரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற சிறப்புரிமை குழு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தனர். பாராளுமன்றம் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவதாக அச்சறுத்தியவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த போது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் பாராளுமன்றம் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.