முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு சட்ட மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார். சட்ட மா அதிபர் இது தொடர்பில் காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளார். டி.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபியை நவீனமயப்படுத்துவதற்காக 900 லட்சம் ரூபா மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இந்தப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் பணத்தைக் கொண்டு டி.ஏ ராஜபக்ஸ தம்பதியினரின் சமாதிகள் புனரமைக்கப்பட்டு அலங்காரப்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 250 லட்ச ரூபா மீளச் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கோதபாயவை கைது செய்ய வேண்டாம் என அரசாங்கத்தின் சகல தரப்பினரும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.