குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நேற்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தின் போது இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது என்றால் எதிர்க்கட்சித் தலைவர் அல்லது பிரதமர் பதவியை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்;கிய தேசியக் கட்சியுடன் சுதந்திரக் கட்சி இணைந்து செயற்படும் வரையில் மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் பயனில்லை என கூட்டு எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.