அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்த ஒருங்கிணைந்த அணிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையாளர் ஏ.கே.ஜோதி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில் கூட்டம் நிறைவடைந்ததனையடுத்து மேற்கண்டவாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பிரமாண பத்திரங்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த தீர்ப்பை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அ.தி.மு.க.வின் சின்னம், கட்சியின் கொடி மற்றும் அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை ஓபிஎஸ்- ஈபிஎஸ் இணைந்த அணியினர் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது
இரட்டை இல்லை சின்னம் தமது அணிக்கு கிடைத்துள்ளது – எடப்பாடி
Nov 23, 2017 @ 07:04
இரட்டை இல்லை சின்னத்தை தேர்தல் ஆணையம் தங்கள் அணிக்கு ஒதுக்கியுள்ளதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தாங்கள் கொடுத்த ஆதாரங்களை பரிசீலித்து தேர்தல் ஆணையம் நல்ல, நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
தங்கள் பக்கம் நியாயம் இருந்ததாலேயே இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் இது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 90 வீதமான நிர்வாகிகள் தங்கள் பக்கம் உள்ளனர் எனவும் இரட்டை இலை சின்னம் கிடைத்ததன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்பது தவறான கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்