குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரோஹினிய முஸ்லிம்கள் தொடர்பில் பங்களாதேஸிற்கும், மியன்மார் அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான ரோஹினிய முஸ்லிம்கள் அண்மைக் காலமாக வன்முறைகள் காரணமாக பங்களாதேஸிற்கு தப்பிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மாதங்களுக்குள் புகலிடம் பெற்றுக் கொண்ட ரோஹினிய முஸ்லிம்கள் நாடு திரும்ப முடியும் என பங்களாதேஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மியன்மாரில் ரோஹினிய முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அமெரிக்கா போன்றன குற்றம் சுமத்தி வருகின்றன.
இந்தநிலையில் ரோஹினிய முஸ்லிம்களை நாட்டுக்கு மீளவும் அழைத்துக் கொள்ள விரும்புவதாக மியன்மார் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.