148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுதந்திர தினத்திற்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியுமா என ஆராயுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டப் பிரிவினருக்கு பிரதமர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். எதிர்வரும் 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தக்கூடிய சாத்தியம் உண்டா என ஆராய்ந்து பார்க்குமாறு கோரியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் துரித கதியில் நடத்தப்பட வேண்டுமென பிரதமர் விரும்புவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love