சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடக்கவிருந்த நிலையில், பணப் பட்டுவாடா முறைப்பாடு காரணமாக தேர்தல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், டிசம்பர் 31ம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, தேர்தலை நடத்துவதற்கான வேலைகளை மேற்கொண்டு வந்த தேர்தல் ஆணையகம் இன்று குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.