298
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தாயார் உயிரிழந்த செய்தியை கேட்ட மகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். யாழ்.கச்சேரி நல்லூர் வீதியை சேர்ந்த பாலசிங்கம் தவமணி (வயது 72) என்பவர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிகிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளார். தாயார் உயிரிழந்த செய்தியை கேள்வியுற்ற அவரது மகனான பாலசிங்கம் பிரசன்னா (வயது 37) மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
Spread the love