305
இந்தியாவில் கடந்த 12 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து இடம்பெறற நான்கு புகையிரத விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் புகையிரத்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் மிகப்பெரும் போக்குவரத்து சங்கிலியாக கருதப்படும் இந்தியன் புகையிரத நாள் ஒன்றில் சராசரியாக 2.4 கோடி பயணிகளை கையாளுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது அவுஸ்ரேலியாவின் மக்கள் தொகைக்கு சமமானதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற நான்கு புகையிரத விபத்துக்களில் சிக்கி 7 பேர் உயிரிழந்திருப்பதுடன் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மூன்று விபத்துக்களும், ஒடிசாவில் ஒரு விபத்தும் நடைபெற்றுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் வாஸ்கோ டா காமா – பாட்னா எக்ஸ்பிரஸ் என்ற புகையிரதம் தடம்புரண்டமையால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதே மாநிலத்தில் அமேதி மாவட்டத்தில் தண்டவாளத்தை கடந்த ஜீப் மீது பயணிகள் புகையிரதம் மோதியமை காரணமாக 4 பேர் பலியாகியுள்ளனர்.
சஹாரான்பூர் அருகில் ஜம்மு – பாட்னா அர்ச்சனா எக்ஸ்பிரசின் இயந்திரப் பகுதி தனியாக கழன்று சென்றது. இயந்திரம் பொருத்தப்பட்டு சிறிது நேரத்தில் மீண்டும் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேவேளை இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இன்று காலை கோரக்நாத் – ரகுநாத்பூர் இடையிலான சேவையில் ஈடுபட்ட புகையிரதம் ஒன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Spread the love