167
எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மேற்கொண்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் சுமார் 235 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவுடா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்த நபர்கள் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . சினாய் மாகாணத்தில் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love