184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எகிப்தில் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
எகிப்தின் சினாய் மாநிலத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 235 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர்.
மதவழிபாட்டுத் தளத்தின் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுக் கொள்வதாக இலங்கை அராங்கம் அறிவித்துள்ளது.
Spread the love