166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பருத்தித்துறை – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்டிருந்த இ.போ.ச. பேருந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் அச்சுவேலிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாயைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பேருந்தில் பயணித்தவர்களுடன் அந்த இளைஞன் அடாவடியில் ஈடுபடுகின்றார் என கிடைத்த முறைப்பாட்டையடுத்தே அவர் கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்
Spread the love