164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் முதனிலை கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான லயனல் மெஸ்ஸி, எதிர்வரும் 2021ம் ஆண்டு வரையில் ஸ்பெய்னின் பார்சிலோனா கழகத்துடன் இணைந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான உடன்படிக்கையில் மெஸ்ஸி கையொப்பமிட்டுள்ளார்.
அதாவது மெஸ்ஸி தனது 34ம் வயது வரையில் பார்சிலோனா கழகத்துடன் இணைந்து போட்டிகளில் பங்கேற்க உள்ளார். இந்தக் கழகம் தமது வீடு போன்றது எனவும், தொடர்ந்தும் கழகத்தில் இணைந்து கொண்டு விளையாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மெஸ்ஸிக்கு பார்சிலோனா கழகம் பாரியளவில் ஊதியத்தை வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love