குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் வலிந்து காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பங்களாதேஸின் பிரதமர் சேக் ஹசீனா தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் சுமார் 2,75000 பேர் காணாமல் போவதாகத் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஸில் அரச ஆதரவு ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பங்களாதேஸ் ஆளும் கட்சி ஆட்சியின் போது கடந்த 2009ம் ஆண்டு முதல் இதுவரையில் 400க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். பங்களாதேஸில் இடம்பெற்று வரும் கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் பிரதான இரண்டு கட்சிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையிலேயே அபிவிருத்தி அடைந்து வரும் பங்களாதேஸில் இடம்பெற்று வரும் காணாமல் போதல் சம்பவங்களை விடவும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் அதிகளவில் கடத்தல்கள் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பங்களாதேஸின் பிரதமர் சேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.