326
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘தமிழ்த் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட இந்த சுவரொட்டிகள் யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. தமிழர் தாயகப் பகுதியிலும், உலக அளவிலும் இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love