201
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை கேக் வெட்டி கொண்டாடாடி மகிழ்ந்துள்ளனர். பிரபாகரனின் வயதைக் குறிக்கும் வகையிலான 63 என்ற மெழுகுதிரியுடன், பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு வாயிலுக்கு முன்னாள் இந்தக் கேக் வெட்டப்பட்டுள்ளது. தமிழீழத்தை சித்தரிக்கும் வகையில் கேக் அமைந்திருந்தது சிறப்பு அம்சம்.
இதேவேளை பல்கலைக்கழக வளாகத்தின் பல பகுதிகளிலும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையிலான சுவரொட்டிகள், இன்று காலை ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love