209
யாழ்.வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் பிறந்த வீடு அமைந்திருந்த காணியின் முன்னால், வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வீடு யுத்தம் நடைபெற்ற கால பகுதியில் பகுதிகளவில் சேதமாகி இருந்த நிலையில் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் உட்பட யாழ்ப்பணத்திற்கு சுற்றுலா வரும் பலரும் அந்த வீட்டுக்கு சென்று வந்திருந்தனர். அந்நிலையில் குறித்த வீட்டினை இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love